LATEST NEWS
‘குழந்தை பருவம் முதல் தற்பொழுது வரை’… நடிகை ராதிகாவின் 60-வது பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய சரத்குமார்….
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.
வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேயான் என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நடிகர் சரத்குமாருக்கு வரலக்ஷ்மி சரகுமார் என்ற மகள் உள்ளார். இவர் முதல் மனைவிக்கு பிறந்தவர்.
தற்பொழுது இவர்கள் மொத்தக் குடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகை ராதிகா சரத்குமார் தனது 60 – வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து கூறி நடிகர் சரத்குமார் அவரின் சிறுவயது முதல் தற்பொழுது வரை உள்ள புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். இதோ அந்த பதிவு….
View this post on Instagram
