ஆடி வெள்ளியில் அம்மன் கோவிலில் ரீல் அம்மனாக ஜொலித்த சீரியல் நடிகை தேவிப்பிரியா… வெளியான புகைப்படங்கள். !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆடி வெள்ளியில் அம்மன் கோவிலில் ரீல் அம்மனாக ஜொலித்த சீரியல் நடிகை தேவிப்பிரியா… வெளியான புகைப்படங்கள். !!

Published

on

தமிழ் சின்னத்திரையில் 90களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலான சித்தி சீரியலில் ஒரு கல்லூரி பெண்ணாக நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் தான் தேவி பிரியா. அதனைத் தொடர்ந்து பல சீரியல் வில்லியாக நடித்த இல்லத்தரசிகள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதும் கூடுதல் திறமை.

Advertisement

சீரியல்களில் நடிப்பதோடு தன்னுடைய திறமையை நிறுத்திக் கொள்ளாமல் தேவி பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே என்ற சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தேவி பிரியா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ஆடி வெள்ளியில் அம்மன் கோவிலில் மஞ்சள் நிற புடவையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in