LATEST NEWS
கர்ப்பமாக இருக்கும் போது பார்ட்டிக்கு சென்ற சிம்பு பட நடிகை…. தரதரவென இழுத்துச் சென்ற கணவர்…. வைரல் வீடியோ….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிலம்பாட்டம். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சனா கான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு நடிகையின் டைரி மற்றும் பயணம் உள்ளிட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர் முழுமையாக மதத்தை பின்பற்றுவதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் இருந்து விலகினார். அதன் பிறகு சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு முழுமையாக திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் இவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறி இருந்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது இவர் இப்தார் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரின் கணவர் சனா கானை தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள சனா கான், கார் டிரைவர் வெகு நேரம் வராததால் அசௌகரியமான சூழலை உணர்ந்து அங்கிருந்து விரைந்து சென்றதாகவும், தண்ணீர் குடிக்கவும் காற்று வாங்கவும் தான் என்னை அப்படி கணவர் அழைத்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
