LATEST NEWS
20 வயதில் மகன்…. 49 வயதில் இளம் நடிகரை மணக்கும் நடிகை மலைகா அரோரா….. அந்த நடிகர் யார் தெரியுமா….????
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா. இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற 20 வயது மகன் ஒருவர் உள்ளார். இதனிடையே கிட்டத்தட்ட 19 வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன் பிறகு பிரபல இளம் நடிகரான போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்து நடிகை மலைகா அரோரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் பல புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வரும். ஆனால் தற்போது வரை இருவரும் தங்களின் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்நிலையில் நடிகை மலைகா அரோரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் சம்மதம் தெரிவித்து விட்டேன் என ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். இந்த பதிவு அர்ஜுன் கபூருடன் இரண்டாம் திருமணத்திற்கு தான் என ரசிகர்கள் பலரும் உறுதி செய்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
