LATEST NEWS
இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா?…. புடவையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனை வர்ணிக்கும் ரசிகர்கள்…. நியூ போட்டோ ஷூட்…..!!!!
தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்.
அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1985 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது வரை அதே இளமையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இதனிடையே ரம்யா கிருஷ்ணன் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற நிலையில் இதனை தொடர்ந்து அடுத்ததாக மற்றொரு நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் அண்மையில் புடவையில் அழகிய புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயதிலும் இவ்வளவு அழகா என கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
