TRENDING
திடீரென பிக்பாஸ் செய்த செயல்…. தனியாக அமர்ந்து புலம்பிய தனலட்சுமி…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சுவாரஸ்யமாக போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் போட்டியாளர் தனலட்சுமி நரகவாசியாக மாற்றப்படும் நிலையில் nomination free zone இல் நுழைப்பவர்கள் பெயரையும் பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி மணிகண்டன், அமுதவாணன், ஜனனி மற்றும் ஏடிகே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனலட்சுமி ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து மூன்று நாள் விளையாடியதற்கு காரணமே இல்லாமல் வெளியே வந்து விட்டேன் என்று கூறி புலம்பியுள்ளார். அது தொடர்பான இன்றைய ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.
