நீலக் கடல் அழகா?… இந்த கடற்கன்னி அழகா?… சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ… வர்ணிக்கும் ரசிகர்கள்…. - Cinefeeds
Connect with us

CINEMA

நீலக் கடல் அழகா?… இந்த கடற்கன்னி அழகா?… சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ… வர்ணிக்கும் ரசிகர்கள்….

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் தற்போது பிஸியாக பாடிக் கொண்டு வருகிறார். அதோடு மட்டுமின்றி  பல முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாகவும் செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி.

இவர் தற்பொழுது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அழகிய கடலில் படகோட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எவ்ளோ அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)