VIDEOS
நான் எப்படி டிரஸ் போட்டா உங்களுக்கு என்ன?… அதை எதுக்கு இவங்க சொல்லணும்… கடுப்பான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராஜலட்சுமி. இதே நிகழ்ச்சியில் அவரின் கணவரும் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த அறிமுகத்தை தொடர்ந்து இவர்கள் என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடலை பாடி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டனர்.
இதனைத் தொடர்ந்து பல பாடல்களைப் பாடிய இந்த ஜோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். அதே சமயம் ராஜலட்சுமி புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் ராஜலட்சுமி மார்டன் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு பலரும் அவரை விமர்சித்து கருத்து தெரிவித்த நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் இது உங்களுக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் உள்ளது, ஆனால் இவங்க எல்லாம் என்ன இந்த மாதிரி டிரஸ் என கூறுவது எங்களை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக கூறுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்வது இல்லை என்று ராஜலட்சுமி கூறிய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க