“தமிழ் பேச்சு எங்கள் மூச்சு”… விஜய் டிவிக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட நடிகர் சசிகுமார்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

“தமிழ் பேச்சு எங்கள் மூச்சு”… விஜய் டிவிக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட நடிகர் சசிகுமார்..!!

Published

on

இன்றைய youtube கலாச்சார காலகட்டத்தில் தமிழுக்காக ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சிகள் மிகவும் குறைவுதான். விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நாம் இதுவரை அறியாத பல தமிழ் சொற்களை அறிய முடிந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி சில வருடங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் தமிழ் மொழிக்காக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசும் ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். தமிழகத்தில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அதே சமயம் 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

Advertisement

தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள். தமிழக முழுவதும் பல ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Muthu Kumaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@naan_muthukumaran)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement