LATEST NEWS
புற்றுநோயால் உயிரிழந்த தனுஷுடன் நடித்த பிரபல துணை நடிகர்… இறுதி சடங்குகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான்… கலங்க வைக்கும் புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த படிக்காதவன் உட்பட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் துணை நடிகர் பிரபு.
பொதுவாகவே சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்கும் பிரபலங்கள் சிலர் திடீரென எட்ட முடியாத உயரத்திற்கு வளர்ந்து விடுகின்றனர்.அதேசமயம் பலரும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த தற்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர்.
அப்படி சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த காணாமல் போன நடிகர் தான் படிக்காதவன் உட்பட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் பிரபு.
இவர் தனுஷின் படிக்காதவன் திரைப்படத்தில் அவரின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை ஆக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் கிடைக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள்களுக்கு அடிமையாகி செலவு செய்துள்ளார்.
இதன் காரணமாக நாளடைவில் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது குறித்து அவருக்கு தெரியவில்லை. அதன் பிறகு மருத்துவமனை சென்று பரிசோதனைகளை செய்த பிறகு இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது.
கொரோனா காலத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் புற்றுநோய்க்கு சிகிச்சையும் பெற முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இவருக்கு யாருமே உதவி செய்யவில்லை. நாளடைவில் புற்றுநோய் காரணமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து காணப்பட்ட இவரை கண்டு பலரும் மனம் வருந்தியுள்ளனர்.
அப்போது அவரைப் பார்த்த பழனி என்பவர் மூன்று வேலையும் உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் கொடுத்து பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவின் நிலை குறித்து கேள்விப்பட்ட இசை அமைப்பாளர் டி. இமான் இவரின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டார்.
இருந்தாலும் புற்றுநோய் முற்றி விட்டதால் தற்காலிக சிகிச்சை மட்டுமே பிரபு எடுத்துக் கொண்டதால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி. இமான் இறுதி சடங்குகள் செய்து அவரின் உடலை தகனம் செய்தார்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் இமானின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
