மறைந்த நடிகர் மாரிமுத்துவின் பிரிவை தாங்காமல் கதறி அழும் ‘எதிர்நீச்சல்’ குடும்பம்… மனதை உலுக்கும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் பிரிவை தாங்காமல் கதறி அழும் ‘எதிர்நீச்சல்’ குடும்பம்… மனதை உலுக்கும் வீடியோ…

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ‘குணசேகரன்’ என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து.இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்த இவர் தற்பொழுது சின்ன திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார். தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Advertisement

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்  ‘குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் இயல்பான நடிப்பே என்று பலரும் கூறி வந்தனர். இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டி வந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.  சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மயங்கி விழுந்தார். அவரை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். தற்பொழுது அவரின் மறைவை தாங்க முடியாமல் எதிர்நீச்சல் குடும்பம் முழுவதும் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in