‘சில விஷயங்களை எதிர்க்க கூடாது, அழிக்கணும்’…! நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட சமீபத்திய வீடியோ படுவைரல்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சில விஷயங்களை எதிர்க்க கூடாது, அழிக்கணும்’…! நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட சமீபத்திய வீடியோ படுவைரல்..!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகளான மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.  இறந்த தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி சோசியல் மீடியாவில் உருக்கமாக  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘ என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’ என குறிப்பிட்டுட்டிருந்தார்.இந்த பதிவானது அனைவரது மனதையும் கலங்கடித்தது.

சமீபத்தில் விரைவில் வெளியாக உள்ள தனது ரத்தம் படம் புரமோஷனுக்கு நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகளுடன் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழ் படம், தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement

 

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ரத்தம் திரைப்படம் மலேசியாவில் இன்று திரையிடப்படுவதாகவும், அவரே அங்கு சென்று நேரடியாக ப்ரோமோஷன் செய்ய இருந்ததாகவும், சூழ்நிலையின் காரணமாக வரமுடியாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்படத்தில் தான் crime journalistஆக நடித்துள்ளதாக கூறிய அவர் குடும்பமாக சென்று பாருங்கள் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by RAAGA (@raaga.my)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in