LATEST NEWS
“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. பிக்பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் அத்துமீறியர் ராபர்ட் மாஸ்டர்…. வீடியோ பார்த்து செம கடுப்பான ரசிகர்கள்….!!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விஷயங்கள் தற்போது முகம் சுழிக்கும் வகையில் மாறி உள்ளது. கடந்த வாரம் கமல்ஹாசன் முன்பே ரட்சிதாவிடம் மறைமுகமாக அவர் ப்ரபோஸ் செய்வது போல நடந்து கொண்டார். தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்க் மீண்டும் ரட்சிதாவிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
அதாவது நான் இனி உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் என கூறி அண்ணனுக்கு முத்தம் கொடு என்று எல்லை மீறி மோசமான செயலில் ரட்சிதாவிடம் அவர் நடந்துள்ளார்.அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டரை கண்டித்து பதிவு செய்து வருகிறார்கள்.
https://twitter.com/whyrajawhy/status/1589973809905676289
