சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… இதோ முழு விவரம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்த பலரும் தற்போது முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய் உள்ளனர்.ஆனால் சிலரோ இளம் வயதிலேயே டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி முன்னணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சினிமாவில் தற்போது பிஞ்சிலேயே பழுத்த  முன்னணி நடிகர், நடிகைகள் இருக்கின்றனர்.

 

Advertisement

அதில் முதலாவதாக நடிகை ஷிவானி நாராயணன், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது என்று கூறினால் கட்டாயம் யாராலும் நம்ப முடியாது. முதல் முதலில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ சூட் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கிளாமரான புகைப்படங்களால் இவருக்கு 35 லட்சம் இன்ஸ்டா உள்ளனர்.

அனிகா சுரேந்திரன் முதல் முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு வயது 19 தான் ஆகிறது.இருந்தாலும் தனது 19 வயதிலேயே தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இவர் அவ்வபோது தனது கிளாமரான போட்டோக்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இவருக்கு 16 லட்சம் இன்ஸ்டா பாலோவர்ஸ் உள்ளனர்.

Advertisement

 

அடுத்ததாக ரவீனா தாஹா, இவர் குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, புலி மற்றும் பூஜை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ரவீனா தற்போது தனது 18 வயதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக இவருக்கு 14 லட்சம் இன்ஸ்ட்டா பாலோயர்ஸ் உள்ளனர்.

Advertisement

 

அடுத்ததாக கேப்ரில்லா, இவர் சில படங்களிலும் சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். இவர் தற்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் மேலும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இன்ஸ்டாவில் 18 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர்.

Advertisement

அடுத்ததாக நடிகை எஸ்தர் அணில்,இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்தார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தனது 21 வயதில் கிளாமரான போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 11 லட்சம் பாலோயிர் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நடித்திருந்தவர் தான் அருண்குமார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை அனைவரும் காதல் அருண்குமார் என்று தான் சொல்கின்றனர். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது 11. அந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகாசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் ஆறாம் வகுப்பு உடன் தனது படிப்பை நிறுத்திவிட்டு அதன் பிறகு படிக்கவில்லை. பிறகு பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் இவர் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது டாப் நடிகையாக இருந்தாலும் ஆரம்பத்தில் தென்றல் என்ற சீரியலில் ஹீரோயினிக்கு தங்கையாக ஓரளவு குழந்தை நட்சத்திரத்திற்கு மேல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வெளிநாடு சென்று தனது முகபாவனைகளை மாற்றிக்கொண்ட இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 

Advertisement

நடிகை ஸ்ரேயா ஷர்மா சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சீரியலில் குழந்தை நட்சத்திரம் மற்றும் விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படி பல படங்களில் நடித்து வந்த இவ்வாறு கதாநாயகியாக முயற்சி செய்த நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தற்போது போட்டோ ஷூட் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

Advertisement

நடிகை சாரா அர்ஜுன் தனது ஒன்றரை வயதிலேயே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு சைவம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறுவயது குந்தவையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இருந்தாலும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ சூட் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் மாஸ்டர் பரத். இவர் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 62 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார். இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அந்தப் படங்கள் எதுவும் ஹிட் கொடுக்கவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in