இந்தியாவின் முதல் 10 பணக்கார நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு பட்டியல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்தியாவின் முதல் 10 பணக்கார நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு பட்டியல்…!!

Published

on

உலக அளவில் ஹாலிவுட்டிற்கு அடுத்தபடியாக இந்திய திரைப்பட தயாரிப்பு மிகப்பெரிய தொழில் துறையாக விளங்கி வருகிறது. திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பெயரும் புகழும் வளர நட்சத்திரங்களின் வாழ்க்கையும் அப்படியே மாறிவிடுகிறது. அதாவது ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்திற்கு நடிக்க தொடங்கிய நடிகர் நடிகைகள் பலரும் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணியில் நடிகர்களாக உள்ளனர்.. அப்படி 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பணக்கார நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷாருக்கான்:

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஷாருக்கான் இதுவரை 80 திரைப்படங்கள் நடித்துள்ளார். முதலில் தீவானா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 600 மில்லியன் நிகர மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார நடிகராவார். இவர் பாலிவுட்டின் பாட்ஷா என்றும் அழைக்கப்படுகிறார்.

அமிதாப் பச்சன்:

Advertisement

நடிகர் அமிதாப்பச்சன் 400 மில்லியன் டாலர்களை கொண்ட இந்தியாவின் பணக்கார நடிகராவார். 1970களில் ஆங்கர் யூத் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். இவரின் தந்தை பிரபல இந்தி கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன்:

Advertisement

சினிமாவில் 80களில் தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இன்றுவரை சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு சுமார் 2680 கோடி ஆகும். சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டு உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய் குமார்:

Advertisement

இந்திய திரைப்பட நடிகரான இவர் தயாரிப்பாளர் மற்றும் தற்காப்பு கலைஞர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 240 மில்லியன் டாலர்கள் ஆகும். ஹிந்தியில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். அதே சமயம் மொத்தம் 225 படங்கள் மற்றும் பிலிம் பேர் விருதுகளுக்கும் பலமுறை இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சல்மான் கான்:

Advertisement

பாலிவுட் பணக்கார நடிகராக திகழும் சல்மான்காலின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 260 மில்லியன் டாலர்கள் ஆகும். இவர் தன்னுடைய பெயரில் 130 க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வரவுகளை வைத்துள்ளார். மேலும் நூறு அதிக ஊதியம் பெறும் பிரபல கலைஞர்கள் பட்டியலில் இவர் 82 ஆவது இடத்தை பிடித்தார். அதே சமயம் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம் பேர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

அமீர்கான்:

Advertisement

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான் கயா மத் சே கயா மத் தக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 225 மில்லியன் டாலர்கள் ஆகும்.

நடிகர் ரஜினி:

Advertisement

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் ரஜினி கதா சங்கமம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 மில்லியன் டாலர்கள் ஆகும்.

அஜய் தேவ்கன்:

Advertisement

பிரபல பாலிவுட் நடிகரான இவர் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் சுமார் 40 மில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டு உள்ளார். இவர் இதுவரை சுமார் 120 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ரன்வீர் சிங்:

Advertisement

இந்தியாவின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் தான் ரன்வீர் சிங். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 118.2 கோடி சொத்துக்களை சேர்த்திருந்தார். தற்போது இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 223 கோடி என கூறப்படுகிறது.

ராம்சரண்:

Advertisement

அடுத்ததாக இந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இறுதியாக இடம் பிடித்திருப்பது நடிகர் ராம்சரண். இவர் சுமார் 372.75 மில்லியன் ரூபாய்கள் சொத்து மதிப்பை கொண்டு உள்ளார். இவர் நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் தெலுங்கு சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு திரைப்படத்திற்கு 25 முதல் 30 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in