LATEST NEWS
நடிகர் ஜெய்யுடன் ரகசிய காதலில் குடும்பம் நடத்தும் வாணி போஜன்…. உண்மை என்ன தெரியுமா?…. அவரே சொன்ன பதில்…..!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் வாணி போஜன் அவ்வபோது பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மிரல் என்ற படத்தின் பிரமோஷனுக்காகபேட்டியளித்து வரும் வாணி போஜன் நடிகர் ஜெயுடன் கிசுகிசுக்கப்பட்ட ரூமர் செய்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது ஒரு ரூமர் செய்தியால் எதற்கு சிரித்து இருக்கிறீர்கள் என வாணி போஜன் கேட்டுள்ளார். இதுதான் சரியான நேரம் பல இயக்குனர்கள் என்னிடம் போன் செய்து கேட்டனர். என்னுடைய கதையை ஒரு நடிகர் கேட்கிறார் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் இருவரும் ஒன்றாக வாழ்ந்து இயக்குனர்கள் கதை கூறும் போது அவர் இருக்கிறார் என்றெல்லாம் ரூமர் செய்தி வந்தது.
அப்படி எதுவும் கிடையாது என் கதையை நான் தான் கேட்கிறேன் எந்த நடிகரும் கேட்கவில்லை. நான் ஒரு நடிகருடன் லிவிங்கில் இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய். நான் அவர்களுக்கு சொல்கிறேன் ஒருவரின் கேரியரை கெடுக்காதீங்க என வாணி போஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
