நயனை கட்டி அணைத்து போஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்…. அதுவும் நண்பர்கள் முன்பே…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நயனை கட்டி அணைத்து போஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்…. அதுவும் நண்பர்கள் முன்பே…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர். அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நயன்தாராவின் 38வது பிறந்த நாளை வருகின்ற 18ஆம் தேதி கொண்டாட உள்ளார்.

Advertisement

 

தற்போது குழந்தைகளை கவனித்து அவர்களுடன் இருந்து வரும் நயன்தாரா தனது பிறந்த நாளை வீட்டிலேயே கொண்டாட உள்ளார். அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது நண்பர்களுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இறுக்கமாக கட்டி அணைத்து போஸ் கொடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in