அஜித்தின் அந்த படத்திற்கு ஜி.பி முத்துவை தட்டி தூக்கிய விக்னேஷ் சிவன்…. அதுவும் எந்த கதாபாத்திரத்திற்கு தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அஜித்தின் அந்த படத்திற்கு ஜி.பி முத்துவை தட்டி தூக்கிய விக்னேஷ் சிவன்…. அதுவும் எந்த கதாபாத்திரத்திற்கு தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் அந்த சீசனில் மக்களின் நம்பிக்கையான போட்டியாளராக கொண்டாடப்பட்டவர் ஜி பி முத்து.டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அப்படியே ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலமாக பிரபலமான இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் உள்ளே நுழைந்தவுடன் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இவர் இறுதி வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார்.அதன் பிறகு எனக்கு பணம் புகழ் எதுவும் தேவையில்லை தான் முக்கியம் என கூறிவிட்டு வெளியேறிவிட்டார். தற்போது ஜி பி முத்து அடுத்ததாக சன்னிலியோனுடன் இணைந்து OMG என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் ஜி பி முத்து அஜித்தின் ஏகே 62 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிசம்பரில் தொடங்கும் அஜித்தின் ஏகே 62 படத்திற்கு விக்னேஷ் சிவன் ஏற்கனவே நடிகர்களை இறுதி செய்துவிட்டார். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், அஜித்தின் அடுத்த படம் குறித்து குழுவினருடன் பேசி வருவதாக ஜிபி முத்து தெரிவித்தார். படத்தில் அவரது கதாபாத்திரம் காமெடி சாயலில் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே அஜித் படத்தில் நடிப்பதற்கு ஜி பி முத்துவை தேர்வு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in