LATEST NEWS
23 வருடங்களை நிறைவு செய்த விஜய் – ஜோதிகா நடித்த… குஷி திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அவ்வகையில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குஷி. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார்.
முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய்யின் திரை வாழ்க்கைக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஷி திரைப்படத்தை tag செய்து ரசிகர்கள் இதனை கொண்டாடி வரும் நிலையில் இந்த திரைப்படம் 23 வருடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் உலக அளவில் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து அப்போதைய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
