விஜய் டிவி டிடி-க்கு ஒரு தம்பி இருக்காரா?… இவ்ளோநாளா இதை மறைச்சுடீங்களே… முதன்முறையாக தனது சகோதரி மற்றும் தம்பியுடன் போட்டோ வெளியிட்ட டிடி… – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி டிடி-க்கு ஒரு தம்பி இருக்காரா?… இவ்ளோநாளா இதை மறைச்சுடீங்களே… முதன்முறையாக தனது சகோதரி மற்றும் தம்பியுடன் போட்டோ வெளியிட்ட டிடி…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி டிடி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி தான் இவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்படும் பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர்.

அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்பொழுது சின்னத் திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் டிடி என்ற திவ்யதர்ஷினி.

Advertisement

தற்பொழுது இவர் வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. இதற்கு காரணம் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்படுகிறது. முன்னணி  நட்சத்திரங்களின் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் டிடி. இவருக்கு ஒரு அக்கா உள்ளார். அவரது பெயர் பிரியாதர்ஷினி. இது நம் அனைவருக்கும் தெரியும்.

இவரும் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வந்து கொண்டுள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு தம்பி இருப்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தற்பொழுது டிடி தனது அக்கா மற்றும் தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in