“திடீரென ஏற்பட்ட மரணம்”… புகைப்படத்தை வெளியிட்ட எமோஷனல் பதிவு போட்ட விஜய் டிவி பிரியங்கா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திடீரென ஏற்பட்ட மரணம்”… புகைப்படத்தை வெளியிட்ட எமோஷனல் பதிவு போட்ட விஜய் டிவி பிரியங்கா..!!

Published

on

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன. அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது. ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் பிரியங்கா தனக்கு நெருக்கமான ஒருவர் மரணம் அடைந்து விட்டதாக மிகவும் வருத்தத்துடன் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதாவது சென்னையில் பிரபலங்கள் பலரும் செல்லும் ஸ்கின் கிளினிக் நடத்தி வந்த வசந்த் ராஜ் குரு என்பவர் இளம் வயதில் உயிரிழந்து விட்டார். Wasஎன அவரை பற்றி இறந்த காலத்தில் குறிப்பிட்டு பேசுவதே எனக்கு பெரிய வலியை தருகிறது என்று பிரியங்கா பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in