LATEST NEWS
விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல் ஜி.பி முத்து…. படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம்…. எந்த சீரியல்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் அந்த சீசனில் மக்களின் நம்பிக்கையான போட்டியாளராக கொண்டாடப்பட்டவர் ஜி பி முத்து.டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அப்படியே ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலமாக பிரபலமான இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் உள்ளே நுழைந்தவுடன் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இவர் இறுதி வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார்.அதன் பிறகு எனக்கு பணம் புகழ் எதுவும் தேவையில்லை தான் முக்கியம் என கூறிவிட்டு வெளியேறிவிட்டார். தற்போது ஜி பி முத்து அடுத்ததாக சன்னிலியோனுடன் இணைந்து OMG என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜி பி முத்து விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன தென்றல் வந்து என்னை தொடும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அந்த சீரியல் நடிகர்களுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜி பி முத்து இந்த சீரியலில் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
