LATEST NEWS
விஜய்யின் முகமே வேறு”…. ஷூட்டிங்கில் இப்படித்தான் இருப்பார்…. முதன்முறையாக மனம் திறந்த 41 வயது நடிகை….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். தனது திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து உள்ள விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜயுடன் நடித்தது பற்றியும் சூட்டியில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்தும் அவருடன் வசீகரா திரைப்படத்தில் நடித்த நடிகை சினேகா மனம் திறந்து பேசி உள்ளார்.
விஜய் எப்போதுமே அமைதியாக மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் மனிதராக இருப்பார். காமெடி காட்சிகளில் சகஜமாக நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு அமைதியாகி விடுவார். கேமரா ஆக்சன் என்று கூறியதும் வேறு மாதிரியும் அதன் பிறகு அப்படியே அமைதியான விஜய் ஆகவும் மாறிவிடுவார் என சினேகா வெளிப்படையாக கூறியுள்ளார்.
