ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய விஜே அர்ச்சனா…. ரசிகர்களுக்கு அவரே சொன்ன குட் நியூஸ்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய விஜே அர்ச்சனா…. ரசிகர்களுக்கு அவரே சொன்ன குட் நியூஸ்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ராஜா ராணி சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் அனைவரும் தங்கள் லட்சியத்தை அடைய எவ்வாறு எல்லாம் போராடுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்காக தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் விஜே அர்ச்சனா.

இவர் சமீபத்தில் திடீரென சீரியலில் இருந்து விலகினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகியதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. ஆனால் அவர் ஏன் சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவர் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

https://twitter.com/vj_archana_/status/1594336014587564033

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in