பாகிஸ்தானின் மோசமான பீல்டரிங் ஐ பார்த்த ரசிகர்கள் வயிறு குலுங்க சிறிது கிண்டலும் கேளும் செய்கிறார்கள் !… வைரலாகும் வீடியோ காட்சிகள் …. – cinefeeds
Connect with us

VIDEOS

பாகிஸ்தானின் மோசமான பீல்டரிங் ஐ பார்த்த ரசிகர்கள் வயிறு குலுங்க சிறிது கிண்டலும் கேளும் செய்கிறார்கள் !… வைரலாகும் வீடியோ காட்சிகள் ….

Published

on

பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதத்தை பார்த்து, கிரிக்கெட் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் முச்சதம் அடித்து மிரட்டினார். ரன்கள் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணி, பீல்டிங்கிலும் செமையாக சொதப்பியது. குறிப்பாக இளம்வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி பவுண்டரி நோக்கி வந்த பந்து எந்த பக்கம் சென்றது என தெரியாமல் திணறி, பந்தை பவுண்டரிக்கு விட்டார்.

 

Advertisement

மீண்டும் ஒருமுறை பந்து பவுண்டரி லைனை நோக்கி செல்ல அதை பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் பந்தை காலால் பவுண்டரிக்கு உதைத்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் திகைத்து, பின்னர் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர். நேரடி வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஷஹீன் ஷா அப்ரிடி வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார் என விளாசித் தள்ளி விட்டார்.மொத்தத்தில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகளால் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in