LATEST NEWS
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?…. பாரதி கண்ணம்மா சீரியல் குழுவின் புதிய பிளான்…. செம கடுப்பான ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினியாக வினிஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இன்றும் டாப் லிஸ்டில் இருப்பதற்கு முக்கிய காரணம்பாரதி கண்ணம்மா எப்போது ஒன்று சேர்வார்கள் என்பது தான். தினம் தோறும் ஏதாவது புதிய ட்விஸ்ட் உடன் சீரியல் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
அது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒன்று சேர்வார்களா மாட்டார்களா இந்த கதை எப்போதுதான் முடியும் என்று ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவிற்கு சீரியல் வந்துவிட்டது.சமீபத்தில் தான் ரசிகர்களின் காதுக்கு இன்பமான தகவல் போல் இந்த தொடர் டிசம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என செய்தி வெளியாகியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் தற்போது சீரியல் குழுவின் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பெண்ணட் மற்றும் அதில் இருக்கும் அகில், அஞ்சலி மற்றும் ஹேமா இடம்பெற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் மக்கள் பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும் என கூறிய நிலையில் சீரியல் குழு எங்களுக்கு END கிடையாது என வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் முடிக்கவே மாட்டீர்களா என கமெண்ட் செய்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
