அடேங்கப்பா.. இது யாருக்கு தெரியும்.. காதல் சுகுமார் இயக்கிய திரைப்படங்களா இது..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.. இது யாருக்கு தெரியும்.. காதல் சுகுமார் இயக்கிய திரைப்படங்களா இது..?

Published

on

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் காமெடி நடிகர் சுகமாரின் நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றது.

மதுரையை சேர்ந்த சுகுமார் காதல் படத்தை தவிர வேறு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் .ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. சமீபத்தில் இவர் தனது திரை அனுபவங்களை பற்றியும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,

Advertisement

 

‘சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம் , மற்றொரு பக்கம் விவேக் டீம் . இந்த பக்கமும் போக முடியாது. அந்த பக்கமும் போக முடியாது. அவங்க ரெண்டு பேரும் என்னை வாழ விடவே இல்லை. நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போலவே நடந்திருக்கிறார்கள். நடிகர்களுக்கே இந்த நிலைமைனா நடிகைகளை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவங்க எல்லாத்துக்குமே  அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் ஆகணும்’ என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

Advertisement

நடிகர் காதல் சுகுமாரை நமக்கு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு சில படங்களை இயக்குனராக இயக்கியும் உள்ளார். இது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆம் இவர் இயக்குனராக மாறி சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார் நடிகர் காதல் சுகுமார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in