அடப்பாவிங்களா?… இந்த scene-அ ஏன்டா cut பண்ணீங்க?… ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இப்படி ஒரு சண்டைக் காட்சியா?… வைரலாகும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவிங்களா?… இந்த scene-அ ஏன்டா cut பண்ணீங்க?… ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இப்படி ஒரு சண்டைக் காட்சியா?… வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம். 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தில் மணிகண்டன், ராஜீஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதில் இருளர் சமூகத்தினர் மீது போலீசார் பொய் வழக்குகளை போட்டு மனித உரிமை மீறல்களின் ஈடுபடுவதை காட்டும் படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் சூரியாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. அதேசமயம் இந்த படத்தில் குறவர் இன மக்களை இழிவு படுத்தியதாக புகார்கள் எழுந்தது.

Advertisement

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனங்களும் குவிந்தன.

இது ஒருபுறம் இருக்க, ஜெய் பீம் படத்தில் இருந்து மாஸான டெலிடெட் சீன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அடப்பாவிங்களா?  இந்த scene-அ ஏன்டா cut பண்ணீங்க?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த டெலீட் செய்யப்பட்ட வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement