அடடே சூப்பர்…. நயன்தாரா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. விக்னேஷ் சிவன் போட்ட பதிவு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே சூப்பர்…. நயன்தாரா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. விக்னேஷ் சிவன் போட்ட பதிவு….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர்.

அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஒன்று வெளியாக இருப்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் அன்று ஸ்பெஷலாக அவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/VigneshShivN/status/1592498971305725952

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in