LATEST NEWS
‘சமந்தா நோய்வாய்ப்பட அந்த நடிகர் தான் காரணம்’… பிரபல நடிகரை வம்புக்கு இழுத்த பயில்வான்… அடுத்து என்ன நடந்துன்னு நீங்களே பாருங்க…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த ’குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உட்பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்பட ஆல்பங்கள் இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழா மேடையில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ’குஷி’ படத்தின் பாடலுக்கு நடனம் ஆடினர். இருவரும் லைவ்வாக இந்த நிகழ்ச்சியில் நடனமாடியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
கிளாமர் உடையில் வந்த சமந்தாவை நடிகர் விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி ரொமான்ஸ் செய்த காட்சி இருவரின் செம்ம கெமிஸ்ட்ரியை உறுதி செய்தது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார். ஹேஷம் அப்துல் வகாப் இசையில் முரளி ஒளிப்பதிவில் ப்ரவின்புடி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. தற்பொழுது குஷி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் நடிகர் விஜய் தேவர்கொண்டாவை பார்த்து, ”சமந்தா நோய்வாய்ப்பட நீங்க தான் காரணம்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
