LATEST NEWS
“இவ்ளோ மங்களகரமா இருக்காங்களே”.. ! – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்டுள்ள கியூட் போட்டோஸ்..
பிரபல டிவி ஒன்றில் ஒலிபரப்பாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றும் தொடர் தான், “பாண்டியன் ஸ்டோர்”. சீரியல் பார்க்கும் நபர்களுக்கு இந்த சீரியல் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் சீரியல் நடிகையான நடிகை சுஜிதா தனுஷ் அவர்கள்.
இதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை சுஜிதா.
மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சுஜிதா அவர்கள், தற்போது சேலையில் மங்களகரமான ஒரு சில போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை சுஜிதா. அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகின்றன.
