சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகள் இவங்களா இவ்வளவு நாள் தெரியாம போச்சே வைரலாகும் புகைப்படங்கள் – cinefeeds
Connect with us

TRENDING

சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகள் இவங்களா இவ்வளவு நாள் தெரியாம போச்சே வைரலாகும் புகைப்படங்கள்

Published

on

இவர் ஆடை வடிவமைப்பாளரும், நிகழ்வு மேலாளரும் ஆவார். இவர் திரைப்படத்துறையில் தடம் பதிக்க முன்னர் 1992 ஆம் ஆண்டி முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஓமானில் மஸ்கட் நகரில் அவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி வந்தார். இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் திரைப்படங்களில் நடிக்கவும், இயக்குனராகவும் பணியாற்றத் தொடங்கினார்.

2006 ஆம் ஆண்டில் சக்கரமுத்து என்ற மலையாளத் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் கரு. பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சினேகாவின் தாயாராக நடித்தார்.cஇதுவே இவரது முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.பிரனயகாலம், சூலை 4, நவல் ஆகிய மலையாளத் திரைப்படங்களில் 2006 – 2008 வரையான காலப்பகுதியில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் பொய் சொல்லப் போறோம், எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

2009 ஆம் ஆண்டில் திரு திரு திரு, ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன் ஆகிய திரைப்படங்களில் துணை வேடங்கள் ஏற்றார். 2010 ஆம் ஆண்டில் விண்ணைத் தாண்டி வருவாயா, ஆண்மைத் தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், கனிமொழி ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும், யே மாயா சேசாவே என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தார்.

2011 ஆம் ஆண்டில் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் தன் மகளின் இறப்பிற்கு பழிவாங்க துடிக்கும் கோபமான தாயாக சித்தரிக்கப்பட்டார்.[3] மேலும் 2012 ஆம் ஆண்டில் ஏக் தீவானா தா என்ற இந்தி திரைப்படத்திலும் லீலை, விளையாட வா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார்.

Advertisement

2013 ஆம் ஆண்டில் சுட்ட கதை, விடியும் முன், நெருங்கி வா முத்தமிடாதே, பியானிஸ்ட் ஆகியவற்றிலும், 2016 ஆம் ஆண்டில் கதகளி, அம்மணி ஆகியவற்றிலும் 2018 ஆம் ஆண்டில் இரவுக்கு ஆயிரம் கண்கள், திமிரு புடிச்சவன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் தி ஆபிசர் என்ற மலையாள நாடகத்தொடரிலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் அவள் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் 1500 அத்தியாயங்களை தொகுத்து வழங்கினார். மேலும் இவர் 25 இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இந்த நிலைங தற்போது இவரது மகள்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருக்கின்றது இதனை பார்த்த ரசிகர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு இவ்வளவு அழகிய மகள்களா என்று வாயை பிளந்து ரசித்துள்ளார்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in