திருமணம் முடிந்த 10 நாட்களில் விவாகரத்து !! முன்னணி சினிமா பிரபலம்தான் காரணம் !! திரையுலகை அதிரவைத்த விஜே ரம்யா !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் முடிந்த 10 நாட்களில் விவாகரத்து !! முன்னணி சினிமா பிரபலம்தான் காரணம் !! திரையுலகை அதிரவைத்த விஜே ரம்யா !!

Published

on

சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் விஜய் டிவி ரம்யா.

விஜய் டிவி ரம்யா தனது தனித்துவமான ஸ்டைலின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர்.விஜய் டிவியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.திரை வாழ்க்கையில் இப்படி இருந்தாலும் அவருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Advertisement

ஒரு பக்கம் தொகுப்பாளராக இவர், ஜொலித்து கொண்டே இருந்தாலும், மற்றொரு புறம்… திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதை தொடந்து, ‘மங்காத்தா’ படத்தில் ரிப்போர்ட்டர் ரோலில் நடித்தார்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் என்பவருக்கு திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆன ஒரே மாதத்தில் இவர் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த பரபரப்புக்கு மத்தியில்… இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ரம்யா. இதனால் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததால் தான் ரம்யாவின் வாழ்க்கை விவாகரத்து வரை சென்றதாக நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வந்தனர்.

Advertisement

இதுகுறித்த கேள்விக்கு தற்போது பதிலை கூறியுள்ளார் தொகுப்பாளினி ரம்யா.எனக்கும் என் முன்னாள் கணவருக்கும் இடையில் நடந்த விவாகரத்து நாங்களாக முடிவு செய்தது.எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் நாங்கள் பிரிந்தோம் இதில் கொண்டுபோய் மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பை நுழைப்பது சுத்த முட்டாள்தனம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் இன்னும் சில படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in