LATEST NEWS
நடிகர் தனுஷை ஒதுக்கிவைத்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த ராட்சச இயக்குனர்!!
நடிகர் தனுஷை ஒதுக்கிவைத்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த ராட்சச இயக்குனர்!! கடுப்பின் உச்சத்தில் தனுஷ்..தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது அனைவரும் அறிந்ததே அன்று தனுஷை பல பேர் கிண்டல் செய்தனர் அதைத்தொடர்ந்து அவர் காதல் கொண்டேன் திருடா திருடி என வெற்றிப்படங்களை கொடுத்த பின்பும் அவரைக் கிண்டல் அடித்துக் கொண்டே தான் இருந்தனர் ஒரு கட்டத்தில் சண்டை காட்சிகளில் நடித்த தனுஷ் பல்லி ஓணான் சண்டையிடுவது போல் இருக்கிறது என்றும் பலர் விமர்சித்து வந்தனர்.
ஆனால் அவைகளை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத தனுஷ் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுப்பது மட்டுமல்லாமல் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பையும் கொடுத்து வருகிறார் இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் என பல மொழிகளில் நடித்துக் கொண்டு இருக்கிறார் இந்நிலையில் ராட்சசன் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பெரிய ஹிட்டானது மட்டுமின்றி திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இந்த படத்தின் இயக்குனரான ராம்குமாரை அழைத்து தனுஷ் ஒரு கதை கேட்டுள்ளார் தனுஷுக்கு மிகவும் பிடித்துப்போகவே நடிப்பதாக கூறி இருந்தார் ஆனால் கதையில் அடிக்கடி திருத்தம் செய்ய கூறியதால் கடுப்பான இயக்குனர் அந்த கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி தற்போது அந்த படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் இதனால் இயக்குனர் ராம்குமார் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் தனுஷ். ஆனால் இதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ராம்குமார் சிவகார்த்திகேயன் திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
