பிக்பாஸ் 4ல் பங்கேற்க போகும் பிரபலங்கள் இவர்கள்தானா..? – லிஸ்ட் ரொம்ப கொ டூரமா இருக்கே பாஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் 4ல் பங்கேற்க போகும் பிரபலங்கள் இவர்கள்தானா..? – லிஸ்ட் ரொம்ப கொ டூரமா இருக்கே பாஸ்..!

Published

on

தமிழக ரசிகர்கள் இடையே சீரியல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சாந்தினி, சிந்து பிளஸ் டூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாந்தினி. அதன்பிறகு அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. தற்போது இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரண் சக்தி, வடசென்னை படத்தில் தனுஷுக்கு மச்சானாக நடித்திருப்பவர். சில மாதங்களுக்கு முன்பு சினிமாவையே உலுக்கிப் போட்ட கள்ளக்காதல் ஜோடிகள் ஆன ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளார்களாம்.

அவர்களைத் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட் இழந்து தவித்து வரும் விமல், சரவணன் மீனாட்சி புகழ் இர்பான், ராதாரவி, பூனம் பாஜ்வா, விசித்திரா, ரம்யா, ரமேஷ் திலக் இவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வந்துள்ளன.

Advertisement

சின்மயி, டிடி, மீனா, ரச்சிதா மகாலட்சுமி, பொன்னம்பலம், நடிகர் ஸ்ரீமன், ரம்யா பாண்டியன், சத்யன், காமெடி நடிகை வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர் மனைவி, கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்களாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என விஜய் டிவி வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசன் இல்லை எனவும் வேறொரு நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. மே மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in