வலிமை OTT ரிலீஸ் … திடீர் ட்விஸ்ட் வைத்த வலிமை படக்குழு !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வலிமை OTT ரிலீஸ் … திடீர் ட்விஸ்ட் வைத்த வலிமை படக்குழு !!

Published

on

வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அஜித் நடித்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது இதனால் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு பேரிடியாய் வந்த செய்திதான் ஊரடங்கு தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

படம் தள்ளிப்போகும் என ரசிகர்கள் அச்சம் அடைந்த நிலையில் வலிமை திரைப்படம் கண்டிப்பாக ஜனவரி 13ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியளித்தார். ஜனவரி 13-ஆம் தேதி OTT-யில் ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே சூர்யா நடித்த சூரரைப்போற்று ஜெய்பீம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியானதால் தியேட்டர் அதிபர்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் அஜீத் போன்ற பெரிய நடிகர் படம் OTT கொடுக்கப்பட்டால் தியேட்டர் அதிபர்களின் நிலை என்ன ஆவது என்று தியேட்டர் அதிபர்கள் வட்டாரத்தில் புலம்பி வருகின்றனர்.

Advertisement

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இதேபோல் பல நாட்களாக ரிலீசாகாமல் காத்திருந்தது அப்பொழுதும் மாஸ்டர் திரைப்படம் OTT-காக கேட்கப்பட்டது ஆனால் அத்திரைப்படத்தின் நடிகர் விஜய் கண்டிப்பாக இந்த திரைப்படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று காத்திருந்து கடந்த பொங்கல் அன்று இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி தமிழகம் எங்கும் ஹிட்டானது அதேபோல் தற்பொழுது அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படம் தியேட்டர் அருகில் வந்து ஹிட்டடிக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in