பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷின் 50வது திரைப்படம்… ஹீரோயின்களாக இத்தனை அழகிகளா?.. அசந்து போன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷின் 50வது திரைப்படம்… ஹீரோயின்களாக இத்தனை அழகிகளா?.. அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். நிவேதிகா சதீஷ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்க உள்ளார். தற்போது தற்காலிகமாக இந்த படத்திற்கு D50 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ள நிலையில் இந்த படத்தில் அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் ஹீரோயினியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in