LATEST NEWS
“வீட்ல என் பொண்டாட்டி இல்ல நீ வரியா என கூப்பிட்டாரு”.. பிரபல நடிகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த சீரியல் நடிகை ரிஹானா..!!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ரிஹானா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சின்னத்திரையில் மிகவும் தைரியமான நடிகைகளில் இவரும் ஒருவர். இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சியூட்டும் விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ஒரு பிரபல நடிகர் அவருக்கு பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அவர் மீது பல பெண்களுக்கும் கிரஷ் இருக்கின்றது. அந்த நடிகருடன் ஒரு திரைப்படத்தில் நான் ஒன்றாக நடித்தேன். அப்போது என்னுடைய மொபைல் நம்பரை வாங்கிக் கொண்ட அவர் சில நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்தபடி அடுத்தடுத்து மெசேஜ் அனுப்பினார்.
உடனே அவரை நான் பிளாக் செய்து விட்டேன். சீரியல் நடிகர் அர்ணவ் என்னிடம் போன் காலில் வீட்டில் என் மனைவி இல்ல நீ வரியா என்று கூப்பிட்டாரு. அதுபோன்று எல்லாம் கேட்பார் என ரிஹானா அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
