மரணத்தை முன்பே கணித்த சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர்… இறுதியாக போட்ட இன்ஸ்டா பதிவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மரணத்தை முன்பே கணித்த சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர்… இறுதியாக போட்ட இன்ஸ்டா பதிவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்துக்கு கார்டியாக அரெஸ்ட் என்று சொல்லப்படும் இருதயம் முடக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி சின்னத்திரை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் ஸ்ருதியின் கணவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அரவிந்த் சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு ரசிகர்கள் பலரையும் தற்போது கலங்க வைத்துள்ளது. அந்த பதிவில் சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் இருந்த வீடியோவை பகிர்ந்து , நல்ல நினைவுகளுடன் இறக்க வேண்டும், நிறைவேறாத கனவுகளுடன் அல்ல என்று பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இறப்பதற்கு முன்பே தனது மரணத்தை அரவிந்த் கனித்தாரா என சோகத்துடன் கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

arvindshekar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arvind__shekar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in