LATEST NEWS
இனிமே சம்பளம்னா ‘புல்லு’தான்..! வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தில் சேர்ந்த… 100 புதிய “ஆட்டுக்குட்டி” ஊழியர்கள்..!!
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோல்க்ஸ்வாகன், போலந்தின் போஸ்னான் நகரில் உள்ள தனது தொழிற்சாலை வளாகத்தில் புல் வெட்டும் இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகளை “வேலைக்கு” அமர்த்தியுள்ளது. அந்தப் பிரம்மாண்ட தொழிற்சாலை வளாகத்தில் 31,000-க்கும் அதிகமான சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழே வேகமாக வளரும் புற்களைப் பராமரிக்க, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சத்தமும் புகையும் மிகுந்த இயந்திரங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் புற்களை மேய்வதற்காக இந்த ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொழில்துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த முயற்சி, உலக அளவில் பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த புதுமையான திட்டம் “அக்ரிவோல்டாயிக்ஸ்” எனப்படும் அதிநவீன சுற்றுச்சூழல் அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். அதாவது, ஒரே நிலப்பரப்பில் சூரிய மின்சக்தி உற்பத்தியையும், கால்நடை மேய்ச்சலையும் இணைத்துச் செயல்படுத்துவதாகும். புல் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது அதிக எரிபொருள் செலவு, சத்த மற்றும் கார்பன் டைஆக்சைடு உமிழ்வு போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன; மேலும் அவை சில நேரங்களில் விலை உயர்ந்த சோலார் பேனல்களையும் சேதப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், ஆடுகள் அமைதியாகப் புற்களை மட்டும் மேய்வதால் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தவிர்க்கப்படுவதுடன், ஆடுகளின் கழிவுகள் மூலம் மண்ணின் தரமும் இயற்கையாகவே மேம்படுகி
இந்தத் திட்டத்தின் மூலம் அந்தச் சூரிய மின் வளாகம் வெறும் மின்சார உற்பத்தி மையமாக மட்டுமில்லாமல், பறவைகள், பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகள் வாழக்கூடிய ஒரு சிறிய இயற்கைச் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆடுகளின் வருகையால் மண்ணின் ஈரப்பதம், புல் வளர்ச்சி மற்றும் பிற உயிரினங்களின் வாழ்வியலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும், தானியங்கி இயந்திரங்களும் நிறைந்த இந்த நவீன காலத்திலும், இயற்கையின் எளிய தீர்வுகள் தொழில்துறைக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதற்கான சிறந்த முன்னுதாரணமாக வோல்க்ஸ்வாகனின் இந்த “100 ஆடுகள்” திட்டம் பாராட்டப்பட்டு வருகிறது.
