பார்க்க ஹீரோயினி போல இருக்காங்களே?… முதன்முறையாக தனது மகன்,மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி… அழகிய குடும்ப புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்க்க ஹீரோயினி போல இருக்காங்களே?… முதன்முறையாக தனது மகன்,மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி… அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஊர்வசி.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Advertisement

அதே சமயம் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர்.

இன்றும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

Advertisement

எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இறுதியாக இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

Advertisement

அடுத்தடுத்த இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. நடிகை ஊர்வசி கடந்த 2000 ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஒரு மகள் இருந்தார்.

ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

Advertisement

ஊர்வசி பின்னர் சென்னை சேர்ந்த சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த ஊர்வசி தற்போது தனது பிள்ளைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்தபுகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in