LATEST NEWS
CSK- க்கு விசில் போடு அனிருத்…. ராதிகா சரத்குமார், ஸ்ரீப்ரியா என சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த 90ஸ் பிரபலங்கள்… வெளியான புகைப்படங்கள்….!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது 16வது சீசன் ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை காண வரிசையாக சினிமா பிரபலங்கள் வந்து நேரில் கண்டு களித்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சிஎஸ்கே மேட்ச் காண பலரும் வந்து ஆதரவு தருகின்றனர். கீர்த்தி சுரேஷ், திரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் போட்டிகளை நேரில் கண்ட ரசித்தது தொடர்பான பல புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் டெல்லி இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.
அந்தப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுவர் சிறுமிகளுடன் கண்டுகளித்தார்.
அதனைப் போலவே தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையான மிருணாளினி ரவி சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை நேரில் கண்டு களித்தார்.
பிரபல இசை அமைப்பாளரான சிஎஸ்கே விசில் போடு அனிருத் மஞ்சள் நிற ஜர்சியுடன் போட்டியை நேரில் கண்டு களித்தார்.
மேலும் 90களில் பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை ராதிகா சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து 90களில் பிரபல நடிகையான ஸ்ரீபிரியாவும் போட்டியை காண வந்திருந்தார்.
இப்படி 90ஸ் பிரபலங்கள் முதல் 2K பிரபலங்கள் வரை அனைவரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த நிலையில் ஸ்டேடியம் கலை கட்டியது.
அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
