48 வயதில் கர்ப்பம்… பல வருட உண்மையை உடைத்த 90ஸ் கவர்ச்சி நடிகை ஷர்மிலி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

48 வயதில் கர்ப்பம்… பல வருட உண்மையை உடைத்த 90ஸ் கவர்ச்சி நடிகை ஷர்மிலி…!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் தற்போது எங்கு எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அடிக்கடி ஒரு சில பிரபலங்களின் செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.அதன்படி 90களில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷர்மிலி.

இவர் தன்னுடைய 13 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதனிடையே பல வருடங்களுக்குப் பிறகு ஷர்மிலி தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் பல வருடங்களுக்குப் பின்னர் தற்போது கர்ப்பமாக இருப்பது உண்மைதான். அதனால் நான் சற்று கவனமாக உள்ளேன்.

Advertisement

நான் இளம் வயதில் ஒரு குழந்தையைப் பெற்று இருந்தால் எப்படி வளர்த்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. தற்போது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய வாழ்க்கையை பொறுத்தவரை அனைத்து விஷயங்களும் சற்று தாமதமாக தான் எனக்கு கிடைத்தது.

அதனைப் போலவே குழந்தையும் தற்போது 48 வயதில் எனக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in