LATEST NEWS
90ஸ் சீரியல் நடிகை ஸ்ரீ துர்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா?…. வெளிவந்த லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…!!!
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ துர்கா. பல வருடங்களாக சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்தார். சிறுவயதிலிருந்தே சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் இவர் நடித்துள்ள நிலையில் மாடலிங் துறையில் தனது கேரியரை தொடங்கினார்.
அதன் பிறகு பத்து வருடங்களுக்கு மேலாக இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல சீரியல்களில் பாசிட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவர் உறவுகள், முந்தானை முடிச்சு, தியாகம், அலைகள் மற்றும் சிகரம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவி மட்டுமல்லாமல் ஜெயா டிவி மற்றும் கேப்டன் டிவியிலும் ஒரு சில சீரியல்களில் இவர் நடித்துள்ளார். அதே சமயம் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றையும் தயாரித்து வழங்கியுள்ளார்.
தன்னுடைய ஐந்து வயதில் இருந்தே சினிமாவில் பணியாற்றி வரும் இவர் தற்போது அவ்வளவாக நடிப்பது இல்லை.. இந்நிலையில் ஸ்ரீ துர்காவின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீ துர்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
