மகளுக்கு இதயத்தில் பெரிய ஓட்டை… “என் வாழ்க்கையே நின்று விட்டது”… கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட விஜய் பட நடிகை…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

மகளுக்கு இதயத்தில் பெரிய ஓட்டை… “என் வாழ்க்கையே நின்று விட்டது”… கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட விஜய் பட நடிகை…!!!

Published

on

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. அப்ப படத்தில் விஜய், ஜெனிலியா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

அவருக்கு தேவி என பெயரிட்டுள்ள நிலையில் தனது மகளுக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனை பற்றி தற்போது பிபாஷா கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்ததும் மூன்றாம் நாளில் அவரது இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த ஓட்டை தானாக சரியாகிறதா என அடிக்கடி ஸ்கேன் எடுத்து பார்க்க சொன்னார்கள். ஓட்டை பெரியதாக இருந்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

மூன்று மாதங்களில் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். என்னுடைய மகளின் எதிர்காலத்துக்காக இப்படி ஒரு முடிவை ஒப்புக்கொண்டேன். ஆப்ரேஷன் தியேட்டரில் ஆறு மணி நேரம் என் வாழ்க்கை நின்று விட்டது போல எனக்கு இருந்தது. ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து தற்போது தேவியின் நலமாக உள்ளார் என்று கண்ணீருடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Freedom To Feed இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@freedomtofeed)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in