அந்த படத்துல நான் அடிச்சதே தப்பு… அந்த மாதிரி சீன் இனி பண்ண மாட்டேன்… விஜய் படம் பற்றி தமன்னா ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அந்த படத்துல நான் அடிச்சதே தப்பு… அந்த மாதிரி சீன் இனி பண்ண மாட்டேன்… விஜய் படம் பற்றி தமன்னா ஓபன் டாக்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

தற்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியான நிலையில் அதில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

இந்நிலையில் தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் நீங்க இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம் அந்த சீனை என்னால் தற்போது கண்ணால் பார்க்கவே முடியாது சுமாராகத்தான் இருந்தது என்று நினைக்கும் படம் எது என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு விஜயின் சுறா திரைப்படத்தில் நடித்த காட்சி மிகவும் மோசமானது என தமன்னா கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in