அடடே!… அப்படியா!… 30 கிலோ எடையை ஒரே வருடத்தில் குறைத்த ரோபோ ஷங்கரின் மனைவி… அவரே வெளியிட்ட சீக்ரெட் டயட் பிளான்…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே!… அப்படியா!… 30 கிலோ எடையை ஒரே வருடத்தில் குறைத்த ரோபோ ஷங்கரின் மனைவி… அவரே வெளியிட்ட சீக்ரெட் டயட் பிளான்….

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

Advertisement

இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா தனது உடல் எடையை 150 கிலோ வரை எட்டியுள்ளார். இதனை ஒரே வருடத்தில் தனது உடல் எடையில் 30 கிலோவை குறைத்துள்ளார்.

அவரின் டயர் பிளான் தான் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இவர் 24 மணி நேரமும் வெந்நீர் தான் குடித்தாராம். உடலுக்கு டீ டாக்ஸ் பானம் மிக மிக அவசியமென்பதால் வெண்ணீரில் பட்டையை ஊற வைத்து குடிப்பது, ஜீரக தண்ணீர், தனியா தண்ணீர் போன்றவற்றையும் குடித்துள்ளார். மேலும் வாரத்தில் ஐந்து நாட்கள் புரோட்டின் பைபர் பழங்கள், கீரைகள், பச்சை காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டுள்ளார்.

Advertisement

இரண்டு நாட்கள் ரைஸ், சப்பாத்தி என சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த டயட்டை மட்டுமே ஒருவரிடம் பின்பற்றி 150 கிலோவில் இருந்த 120 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா. இதைத் தொடர்ந்து மேலும் அவர் தனது உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in