LATEST NEWS
“நோ கார்… நோ பிளாட்… ஒன்லி நேர்மை!” புனே இளைஞரின் அதிரடி ‘மணமகள் தேவை’ பேனர்..! ஆனா.. நம்பரை போட மறந்துட்டீங்களே பாஸ்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 30 வயதான ராகவ் விஸ்வநாத் ஷிண்டே என்ற இளைஞர், தனக்குத் திருமணம் செய்ய பெண் தேடி ஒரு மாபெரும் விளம்பரப் பலகையை வீதியில் வைத்துள்ளார். இந்த வித்தியாசமான யோசனை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்குப் பெண் தேடுவது பல ஆண்களுக்குக் கடினமாகி வரும் சூழலில், மேட்ரிமோனி செயலிகளைத் தாண்டி இந்த இளைஞர் கையாண்ட இந்த நூதன முறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த விளம்பரப் பலகையில் ராகவ் தன் சுயவிவரத்தை மிகவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஆண்கள் தங்களுக்குச் சொந்த வீடு, கார், நிலம் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சூழலில், இந்த இளைஞரோ தன்னிடம் சொந்தமாக பிளாட் இல்லை, கார் இல்லை மற்றும் விவசாய நிலமும் இல்லை என்று நேர்மையாகப் பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு மாதச் சம்பளமாக 25,000 ரூபாய் கிடைப்பதாகவும், தனக்கு ஏற்ற ஒரு நல்ல மணமகளைப் பரிந்துரைக்குமாறும் அந்த பேனரில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dasqqfmss6_/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இவருடைய நேர்மையைப் பாராட்டினாலும், பலர் “பெண்ணைப் பற்றிய விவரங்கள் சரி, ஆனால் உங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண்ணை பேனரில் போட மறந்துவிட்டீர்களே தோழரே!” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், இந்த விளம்பரப் பலகைக்காக அவர் செய்த செலவிலேயே ஒரு மேட்ரிமோனியில் பதிவு செய்திருக்கலாம் என்றும் சிலர் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர்.
