LATEST NEWS
எம்மாடி…! 15 அடி மலைப்பாம்பைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கும் குட்டி பாப்பா..! வியூஸ்களுக்காகக் இப்படியா..? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் வீடியோவில், ஒரு சிறுமி பயமோ நடுக்கமோ இன்றி 15 அடி நீளமுள்ள ராட்சத அலைந்து திரியும் மலைப்பாம்பு உடன் விளையாடி முத்தமிடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருக்கும் அச்சிறாமி, தன் முன்னே இருக்கும் ராட்சத மலைப்பாம்பின் மீது படுத்துக் கொள்வது, அதைச் சுற்றிப் பிணைந்து கொள்வதுடன், ஒரு கட்டத்தில் அதன் முகத்தைப் பிடித்து முத்தமிடவும் செய்கிறாள். பொம்மையுடன் விளையாடுவது போல் சிறுமி செய்யும் இந்த ஆபத்தான விளையாட்டு பார்ப்போரை உரைய வைத்துள்ளது.
மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவை மனிதனையோ அல்லது பெரிய விலங்குகளையோ உயிருடன் விழுங்கும் அளவுக்குக் கடுமையான பலம் கொண்டவை. எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இன்றி, அத்தகைய ஆபத்தான பாம்பின் மிக அருகில் சிறுமி இருப்பது பெரும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஒரு சிறிய தவறு கூட அசம்பாவிதத்தில் முடிந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த வீடியோவை ‘ரியல் டார்சான்’ என்று அறியப்படும் பிரபல அமெரிக்க சமூக வலைத்தளப் பிரபலம் மைக் ஹோல்ஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
https://www.instagram.com/reel/DbSI23JglQ4/?utm_source=ig_web_button_share_sheet
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சிறுமியின் பாதுகாப்பைக் குறித்துப் பலரும் தங்களின் கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இணையத்தில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகவே இத்தகைய ஆபத்தான காரியங்கள் செய்யப்படுவதாகப் பயனர்கள் சாடியுள்ளனர். மேலும், “இந்த வனவிலங்குகள் ஒருபோதும் மனிதர்களின் நண்பர்களாக மாற முடியாது; மனிதர்களைப் போன்ற உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்தி அவற்றுக்குக் கிடையாது” என்றும் கருத்து தெரிவித்து கவலை எழுப்பியுள்ளனர்.
