“திமுகவுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் இல்ல… தவெக தேவையில்லாம வீண் பழி போடுது…” நிர்மல் குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் இல்ல… தவெக தேவையில்லாம வீண் பழி போடுது…” நிர்மல் குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி..!!

Published

on

திமுகவுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் வலியுறுத்தியிருந்த நிலையில், தவெக தேவையில்லாமல் வீண் பழி போடுவதாக ரகுபதி கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அவர் மீது போதிய ஆதாரம் இல்லாததாலும், கைப்பற்றப்பட்ட வீடியோ தெளிவாக இல்லாததாலும் அவரைக் கைது செய்ய இயலவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், தற்போது போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in